Asianet News Tamil

இதையெல்லாம் யார் கிளப்பிவிடுறா?... இந்தியன் 2 வதந்தியால் கடுப்பான லைகா...!

இதனிடையே இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா லாக்டவுன் நிறைவடைந்த பிறகு தெரிய வரும் என்றும் தகவல்கள் வெளியாகின. 

Lyca Production Said Indian 2 Not Releasing in Two part
Author
Chennai, First Published May 14, 2020, 8:00 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

இதனிடையே இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா லாக்டவுன் நிறைவடைந்த பிறகு தெரிய வரும் என்றும் தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த தகவலையும் லைகா நிறுவனம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதை பார்த்த லைகாவோ, அப்படி எந்த திட்டமும் இல்லை, படத்தை நிச்சயம் வெளியிடுவோம் என்று விளக்கம் அளித்தது. மேலும் தொடர்ந்து இந்தியன் 2 படம் குறித்து இந்த மாதிரியான வதந்திகளை எல்லாம் யார் பரப்பிவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை என லைகா நிறுவனம் கடுப்பில் உள்ளதாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios