பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்நிலையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக 'பிரண்ட்ஷிப்' என்கிற படத்தில் நடிக்க உள்ள அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஏற்கனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியபோது, தமிழில் ட்விட் போட்டு, தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவருக்கு தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில்... நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலான' என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில், இப்போது ஹர்பஜன் சிங் 'பிரண்ட்ஷிப்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க: உயிருக்கு போராடும் இளம் நடிகர் 

இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்க உள்ளார். கவின் - லாஸ்லியா இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த கவிலியா... ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று ஏமாற்றம் என்றாலும், ஹர்பஜன் சிங்குடன் லாஸ்லியா நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.