20 வயது மலையாள நடிகர், நகுல் தம்பி என்பவர் கோரவிபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவருடைய மருத்துவ செலவிற்காக குடும்பத்தினர் சமூகவலைதளத்தில் உதவி கேட்டு வருகின்றனர்.

மலையாள நடிகரும் டான்ஸும் ஆன நக்குல் தம்பி மிகவும் கிரிட்டிக்களான நிலையில், சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான 'பதினெட்டாம்படி' படத்தின் மூலம் பிரபலமானவர்.

இதுகுறித்து தற்போது தெரிவித்துள்ள தகவலினபடி, நடிகர் நகுல் தம்பியும் அவருடைய நண்பர் ஆதித்தனும் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் சென்றபோது,  கொடைக்கானல் ரோட்டில் எதிரே வந்த பஸ் மீது இவர்கள் சென்ற கார் அதிவேகமாக மோதி இருவருக்கும் கடந்த ஜனவரி 5ஆம் தேதி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்களை இருவரையும் உடனடியாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர். இதில் நகுல் தம்பிக்கு மூலையிலும், இடுப்பு எலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதுவரை இவருடைய மருத்துவ செலவிற்காக இவருடைய குடும்பத்தினர் 7 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். மேலும் 12 லட்சம் செலவு செய்தால் மட்டுமே இவரை காப்பாற்ற முடியும் என்கிற சூழ்நிலை உள்ளதால், பண உதவி கேட்டு சமூக வளைத்ததில் இவருடைய விபத்து குறித்து கூறி, பண உதவி கேட்டு வருகிறார்கள்.