Asianet News TamilAsianet News Tamil

லியோ + விக்ரம் + ரோலக்ஸ்.. வெறித்தனமான Mashup வீடியோ.. LCU ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த படக்குழு..

லோகிவர்ஸ் 2.0வின் அதிகாரப்பூர்வ தீம் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Lokiverse 2.0 Theme official video Released from leo movie
Author
First Published Oct 27, 2023, 12:50 PM IST

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை உலகளவில் 500 கோடி வரை வசூல் செய்துள்ளது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அனிருத் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பிஜிஎம் ஆகியவற்றுக்கு தனி ரசிக பட்டாளமே உள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் லோகிவர்ஸ் 2.0 க்கான அதிகாரப்பூர்வ தீம் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தின் இறுதியில் இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. லோகிவர்ஸ் 2.0, LCU இன் கீழ் உள்ள மூன்று படங்களின் முக்கிய கருப்பொருள்களின் மேஷப்-ஆக உருவாகி உள்ளது. அதாவது தளபதி விஜய் நடித்த படம் தவிர கமல்ஹாசன் நடித்த விக்ரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்களின் பின்னணி இசையும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும். இந்தப் பாடலில் இதுவரை LCU2-வில் உள்ள நான்கு முக்கிய கதாபாத்திரங்களான டில்லி, விக்ரம், லியோ தாஸ் மற்றும் ரோலக்ஸ் இடம்பெற்றுள்ளன.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் பதாகையின் கீழ் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துளார். 

லியோ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக லைவர் 171 என்று அழைப்படும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது., அனிருத் இசையமைக்கிறார். இப்படம் எல்.சி.யு.வின் கீழ் வராது என்றும் தனிப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லியோ உடன் போட்டிபோட பயந்து ஓடிடிக்கு தாவிய புதுப்படங்கள்.. இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா?

அதுமட்டுமின்றி, கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை இயக்க உள்ளார். மேலும் நடிகர் பிரபாஸை வைத்து ஆக்‌ஷன் படம் ஒன்றையும் இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். 10 படங்களை இயக்கிய பிறகு, திரைத்துறையில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாகவும் லோகேஷ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios