Vikram 50 Days : லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த விக்ரம் படம் இன்று 50-வது நாட்களை எட்டி உள்ளது.
கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். இப்படத்தை கைதி, மாநகரம், மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், மாயா, பகத் பாசில், காயத்ரி, ஷிவானி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு இதில் இடம்பெற்றிருந்த சர்ப்ரைஸ் கதாபாத்திரங்களும் ஒரு காரணம். அதன்படி ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் செய்து ரசிகர்களை வாவ் சொல்ல வைத்தார்.
இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!

இதையடுத்து கிளைமேக்ஸில் 5 நிமிடங்கள் மட்டுமே வரும் நடிகர் சூர்யா, ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு இவரை விட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அல்டிமேட்டாக நடித்து அப்லாஸ் வாங்கினார். இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், விக்ரம் படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டி உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு போஸ்டர் இன்றையும் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் மூலம் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... கஷ்டமா தான் இருக்கு.. ஆனா! விவாகரத்து குறித்தும், அடுத்த காதல் பற்றியும் முதன்முறையாக மனம்திறந்து பேசிய சமந்தா
