சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், விரைவில் தனது அடுத்த திரைப்பட பணிகளை துவங்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். அபூர்வ ராகங்கள் திரைப்படம் துவங்கி ஜெயிலர் திரைப்படம் வரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை 73 வயதிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மெகாஹிட் நடிகராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

குறிப்பாக அவர் அண்மையில் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் சுமார் 600 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170 ஆவது திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ளார். 

ரஜினி.. நெல்சன்.. அனிரூத்.. இதோட லிஸ்ட் முடியல.. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

இம்மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு அவரது 171-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால் தற்பொழுது அந்த படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Scroll to load tweet…

அதாவது தனது 171 வது திரைப்படத்தில் வரும் சில காட்சிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் லோகேஷ் கனகராஜ் கூற, அதை நெல்சனிடம் கூறி தனது ஜெயிலர் திரைப்படத்தில் அந்த காட்சிகளை ரஜினி பயன்படுத்திக் கொண்டதாகவும், இதனால் கோபமடைந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், ட்விட்டர் தளத்தில் சில பயனர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். 

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 169 படம் நடித்த ஒரு ஜாம்பவான், இப்படி கீழ்த்தரமான வேலைகளை அவர் செய்யவேண்டிய அவசியமே இல்லை என்றும், நிச்சயம் தலைவர் 171 படம் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் என்றும் அந்த டீவீட்டுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர் ரஜினி ரசிகர்கள். 

Scroll to load tweet…

மேலும் பிரபல திரை விமர்சகர் ஒருவர் வெளியிட்ட டீவீட்டில், தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம், நிச்சயம் லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படம் திட்டமிட்டவாறு எதிர்வரும் 2024ம் ஆண்டு உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இன்ஸ்டாவில் சிக்கிய லவ் பேர்ட்ஸ்..! ஒரே வீட்டில் ராஷ்மிக்கா மற்றும் விஜய் தேவரகொண்டா? சமந்தா ரசிகர்கள் நிம்மதி