லோகேஷ் கனகராஜ்:

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சுதீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்த 'மாநகரம்' என்கிற வித்தியாசமான கதையை படமாக இயக்கி, ரசிகர்களை தன்னுடைய முதல் படத்திலேயே  ஒட்டுமொத்தமாக கவர்ந்தவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

மிரட்டிய கைதி:

நடிகர் கார்த்தியை வைத்து, தன்னுடைய இரண்டாவது படமான கைதி படத்தை இயக்கி இருந்தார். குறிப்பாக இந்த படத்தில் ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை, பின் எப்படி படம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் இருந்த கேள்வியை பொடி பொடியாக்கி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இப்படம். ஒரே இரவில் நடக்கும் கதையை மிகவும் யதார்த்தமாகவும் விறுவிறுப்புடனும் கூறியிருந்தார்.

மாஸ்டர்:

இவ்விரு படங்களை அடுத்து தற்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. தளபதி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேற்றைய தினமே வெளியாகவேண்டிய நிலையில், கொரோனாவால்...  போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வெளியாகாமல் போனது. இதே போல் கடந்த இரண்டு வாரங்களாக ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் அனைத்தும் வெளியாகாமல் உள்ளது. எனினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, அணைத்து தரப்பு ரசிகர்களுக்குமே சற்று அதிகமாகவே உள்ளது.

அடுத்த படம்:

மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதால், அடுத்தது தலைவருக்கு லோகேஷ் கனகராஜ் ஸ்கிரிப்ட் எழுதி கொண்டிருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. மேலும் இந்த படத்தை உலகநாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஒரே கல்லுல ரெண்டு மங்க:

ஒருவேளை லோகேஷ் கனகராஜ், ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் இயக்கும் படத்தில், ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகிவிட்டால், தலைவர் - உலகநாயகன் என இருவருடனும் ஒரே படத்தில் சேர்ந்து பயணிக்கும் மிக பெரிய வாய்ப்பு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கும்.