கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான திரையரங்குகள் கடந்த நான்கு மாதமாக மூடியே உள்ளதால், ரிலீசுக்கு தயாரான அணைத்து படங்களும் தற்போது ரிலீஸ் செய்யமுடியாமல் உள்ளது. ஆனால் சிறு பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பெண்குயின், யோகிபாபுவின் காக்டெயில் ஆகிய படங்கள் வெளியாகியது. இதை தொடர்ந்து தற்போது வைபவ் ஹீரோவாகவும், வாணி போஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ள லாக்கப் படம் நாளை ஓடிடி தலத்தில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் வெங்கட் பிரபு, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படம் துப்பறியும் திகில் கதையம்சத்தை மையமாக வைத்து உருவாக்கபப்ட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: அழகை பார்க்காமல்... மனதை பார்த்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றிய தகவல்..!
 

இந்த படத்தின் கதையும், கிளைமாக்ஸும் எதிர்பாராத திருப்பு முனைகளை கொண்டதாக இருக்கும் என இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள வைபவ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக வைபவ் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், விறுவிறுப்பான கைதைக்களத்தில் இந்த படம் நகரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நட்சத்திர ஜோடி சினேகா - பிரசன்னாவின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..! வாங்க பார்த்துட்டு வரலாம்..!
 

திரையரங்கம் திறந்ததும் பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி, ஆலம்பனா, ஆகிய படங்கள் நிச்சயம் திரையரங்கில் தான் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார்.