ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள 'LKG ' படத்தின் முக்கிய அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், எளிதில் பலரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், எளிதில் பலரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
அப்படியே சிலர் பிடித்தாலும், அவர்களுக்கு திடீர் என ஹீரோ வாய்ப்பு வர, காமெடி நடிப்புக்கு டாடா காட்டி விடுகிறார்கள். இதனால் காமெடி நடிகர்களில் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் காமெடியில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தனக்கான, காமெடி பாணியில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.
இவர் கதையின் நாயகனாக, நடித்துள்ள திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படம் அரசியல் நையாண்டி கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
அதாவது, பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இப்போது இந்த படத்தின் புரமோஷனை துவங்கிவிட்டனர் படக்குழுவினர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த், மற்றும் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.