சாக்க்ஷி தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'LGM' டீசர் ரிலீஸ் குறித்த தேதி அறிவிப்பு!
சாக்க்ஷி தோனி தயாரிப்பில் உருவாகி வரும் LGM படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி மனைவி சாக்ஷி, தோனி என்டெர்டெய்ன்மென்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ள நிலையில், இதன் மூலம் தன்னுடைய முதல் படமாக L.G.M என்கிற படத்தை தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், 'லவ் டுடே' பட நாயகி இவனா ஹீரோயினாக நடிக்கிறார். நதியா ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவ்வப்போது இப்படம் குறித்த தகவல்களை அடிக்கடி படக்குழு, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வரும் நிலையில்... தற்போது டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாடை தெரியும் குட்டை டாப் அணிந்து கிளாமரில் தெறிக்கவிடும் தமன்னா!
அதன்படி, நாளை ஜூன் 7 ஆம் தேதி... 7 மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் டீசர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. L.G.M என்பது லெட்ஸ் கெட் மேரீட் என்பதின் சுருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.