Let join your children in government school - dhamu requested with all parents
பெற்றோர்களே, தாய்மார்களே உங்க குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வையுங்கள் என நடிகர் தாமு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதுனே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்றைய சூழலில், பலரும் தங்களது குழந்தைகளை உயர்தர தனியார் மற்றும் மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க பெரும்பாலான பெற்றோர்கள் விருப்புவதில்லை. இதனால், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைய தொடங்கிவிட்டது. இதையடுத்து, ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதில் தமிழக அரசு, கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளை ஆதரிக்கும் வகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முன்வர வேண்டும். அரசுப் பள்ளிகளை நாம் ஊக்குவிப்பது மிக அவசியம் என்றும் நடிகர் தாமு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது தமிழக அரசுப் பள்ளிகள் அனைத்து வசதிகளுடன் இருப்பதாகவும், தனியார் பள்ளிகளை விட சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்த தாமு, மாநிலத்திலேயே பல அரசு பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வருவதாகவும் கூறினார்.
