லியோ ரிலீஸ்.. 67 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய் மக்கள் இயக்கத்தினர் ..
விஜய்யின் 67ஆவது திரைப்படமான லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 67 வாகன ஓட்டிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் லியோ படம் இன்று உலகம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை ஆட்டம், பாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய்யின் 67ஆவது திரைப்படமான லியோ திரைப்படத்தை வரவேற்கும் வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்த 67 வாகன ஓட்டிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் விஜயன்பன் தலைமையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சந்திப்புகளில் தலைக்கவசம் அணியாமல் வந்த 67 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தலைக்கவசம் இல்லாத வாகன ஓட்டிகளை அழைத்து அவர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் கட்டாயம் குறித்தும் எடுத்துரைத்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களது தலையில் ஹெல்மெட் அணிவித்து பாதுகாப்பாக வாகன ஓட்டுமாறு அறிவுறுத்தினர். மேலும் ஹெல்மெட்டில் விஜயின் உருவப்படம் மற்றும் லியோ திரைப்படத்தின் போஸ்டர்., *Don't Drink..!! NO Smoking..!! வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
லியோ திரைப்பட பாடல் ஒன்றில் நடிகர் விஜய் புகை பிடிப்பது மது வாசகங்கள் அடங்கிய பாடல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலைக்கவசங்களை வழங்கி மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என கூறி கையில் பதாகைகளுடன் ஏந்தியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது