கீர்த்தி சுரேஷ் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை; விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களாக லியோ FDFS பார்த்த பிரபலங்கள்
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் அப்படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்துள்ளனர்.
leo FDFS
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி பிறமாநிலங்களில் 4 மணிக்கு திரையிடப்பட்டாலும், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது.
anirudh and lokesh kanagaraj
லியோ படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டபோது ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். லியோ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் கண்டுகளித்துள்ளனர். சென்னையில் உள்ள வெற்றி திரையிரங்கில் இருவரும் லியோ படம் பார்த்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Keerthy suresh and Aishwarya lekshmi
அதேபோல் நடிகர் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், தளபதியின் வெறித்தனமான ரசிகை என்பதால் அவர் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள வெற்றி தியேட்டரில் லியோ முதல் காட்சி கண்டுகளித்தார். அவருடன் பொன்னியின் செல்வன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் வந்திருந்தார்.
Karthik subbaraj
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ், விஜய்யின் வெறித்தனமான ரசிகனாக வந்து லியோ படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் கண்டுகளித்தார்.
Mansoor Alikhan and Karthik subbaraj
அதேபோல் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் மன்சூர் அலிகானும் சென்னை கமலா தியேட்டரில் லியோ முதல் காட்சியை பார்க்க வந்திருந்தார். அவரும், கார்த்திக் சுப்புராஜும் கமலா தியேட்டர் ஓனர் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தான் இது.
இதையும் படியுங்கள்.. போலீசார் குவிப்பு... லியோ FDFS ரத்து! ரோகிணி தியேட்டரில் கடும் கட்டுப்பாடு - காரணம் என்ன?