Leo Scene Leaked: ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்கான 'லியோ' பட காட்சி..! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ..!

லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

leo movie scene leaked in social media

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி, அதாவது நாளை ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இப்படத்தை வரவேற்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதால், தமிழகத்தில் முதல் காட்சி, 9 மணிக்கு தான் துவங்க உள்ளது. எனவே அண்டை மாநிலங்களான, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்றவற்றில் காலை 7 மணி மற்றும் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சிலர் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்துள்ளதாக தெரிகிறது.

leo movie scene leaked in social media

Vijay Poster: விடியல் ஆட்சி முடிந்து.. விஜய் ஆட்சி தொடங்கட்டும்! தளபதி ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

இது ஒருபுறம் இருக்க, 'லியோ' படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில்... லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நொடிகளே ஒளிபரப்பாகும் இந்த காட்சி... திரையரங்கில் படத்தின் டெஸ்டிங் காட்சி திரையிடப்பட்ட போது எடுக்கப்பட்டுள்ளது.

leo movie scene leaked in social media

Jyothika About Suriya: தல தோனியை பீட் பண்ணிடீங்க சூர்யா..! ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னலாக பேசிய ஜோதிகா.!

இதை தொடர்ந்து சினிமா ஆர்வலர்கள் மற்றும் தளபதி ரசிகர்கள் பலர், இந்த காட்சியை அதிகம் ஷேர் செய்து வைரலாக்க வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர். 'லியோ' படத்தின் தயாரிப்பாளர், லலித் குமாரும், சென்னை உயர்நீதி மன்றத்தில் பைரஸிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, சட்ட விரோதமாக சுமார் 1200க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிட கூடாது என உத்தரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios