Vijay Poster: விடியல் ஆட்சி முடிந்து.. விஜய் ஆட்சி தொடங்கட்டும்! தளபதி ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!
'லியோ' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தளபதியின் ரசிகர்கள் சிலர் அரசியல் நோக்கத்தோடு ஒட்டியுள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
Leo Release Tomorrow:
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள, 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. படத்தின் ரிலீசுக்கான பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, படத்தை வரவேற்கவும் தயாராகி உள்ளனர் தளபதியின் ரசிகர்கள். மேலும் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், காலை 4 மணி காட்சி, மற்றும் 7 மணி காட்சி திரையிட, நீதிமன்றம், மற்றும் தமிழக அரசிடமும் முட்டி மோதி பார்த்தும் இருதரப்பும் கையை விரித்ததால் நாளை 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
Leo Problem Solved:
அதே போல் தயாரிப்பு நிறுவனத்தின் நிபந்தனைக்கு, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில் படம் ரிலீஸ் ஆர்வத்திலும் சிக்கல் ஏற்படுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் ஒரு வழியாக இந்த பிரச்சனையில் சுமூக முடிவை எட்டியதை தொடர்ந்து, நாளைய முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனையானது. இதனால் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Vijay Fans Poster:
இது ஒருபுறம் இருக்க, தளபதியின் படத்தை வரவேற்க போஸ்டர் ஒட்டுகிறோம் என கூறி... தற்போது நெல்லையில் உள்ள ரசிகர்கள் சிலர் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல், ஆளும் கட்சியை சுட்டி காட்டும் விதத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vijay Fans Attacked tamilnadu Government:
இந்த போஸ்டரில், "விடியல் அரசு முடிந்து, விஜய் ஆட்சி துவங்கட்டும், உயிராய் இருப்போம் என்றும் உங்கள் பின்னால் என அச்சிட்டுள்ளனர். மேலும் பல ரசிகர்கள் சினிமாவை தாண்டி... அரசியல் நோக்கத்துடன் 'லியோ' பட போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதன் மூலம் தளபதியின் அரசியில் வருகையை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கார்த்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.
Jyothika About Suriya: தல தோனியை பீட் பண்ணிடீங்க சூர்யா..! ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னலாக பேசிய ஜோதிகா.!