ஆண்டவர் கிட்டயே அப்டேட்டா... கமலின் வெறித்தனமான ரசிகன் என்பதை மீண்டும் நிரூபித்த லோகேஷ் கனகராஜ்
கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், சைமா விருது விழாவில் அவரின் அடுத்த பட அப்டேட்டை கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
சைமா விருது விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். கடந்தாண்டு சைமா விருதுகளில் மாஸ்டர் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற லோகேஷ் கனகராஜ், இந்த ஆண்டு விக்ரம் படத்திற்காக அவ்விருதை வென்றிருக்கிறார். அவர் விருது வாங்கியதும் அங்கிருந்த ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு கத்தியதால் லோகேஷ் அதுகுறித்து முதலில் பேசினார்.
லியோ படத்தின் அப்டேட்டுகளை படம் ரிலீஸுக்கு 30 நாள் முன்னாடி இருந்து வெளியிட திட்டமிட்டு இருந்தோம். நாளை முதல் லியோ அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் லோகேஷ். இவர் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்காக சட்டையை கழட்டிட்டு சண்டைக்கு போவேன் என்று அண்மையில் ஒரு விருது விழாவில் கூட ஓப்பனாக சொல்லி இருந்தார் லோகேஷ்.
இதையும் படியுங்கள்... குந்தவை திரிஷா முதல் ஏஜெண்ட் டீனா வசந்தி வரை சைமா விருதுகளை வென்றுகுவித்த பிரபலங்கள் - முழு வின்னர் லிஸ்ட் இதோ
இப்படி கமலின் வெறித்தனமான ரசிகனாக இருந்து வரும் லோகேஷ், நேற்று நடைபெற்ற சைமா விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனிடம் மேடையிலேயே, சார் நீங்களும் மணிரத்னம் சாரும் இணையும் படத்தோட அப்டேட் கொடுங்க என கேட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போக, உடனே கமல்ஹாசனும் லோகேஷுக்கு நோ சொல்ல முடியாமல் ஒரு குட்டி அப்டேட் ஒன்றை வெளியிட்டார்.
நாயகன் படத்திற்கு பணியாற்றியது போல் தாங்கள் இருவரும் தற்போது பொறுமையாக அப்படத்தின் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய கமல், தான் அந்த படத்திற்காக தான் தற்போது தாடி வளர்த்து வருகிறேன். இதுதான் நீங்கள் கேட்ட அப்டேட் என்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். லோகேஷின் லியோ பட அப்டேட்டுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் கமல் பட அப்டேட்டுக்காக காத்திருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்.. சைமாவில் சங்கமித்த கோலிவுட் ஸ்டார்ஸ்