ரஜினிகாந்துக்கே பிடித்த சிங்கப்பூர் சூப்பர் ஸ்டார் யார் தெரியுமா? அவரே சொன்ன உண்மை - Throw Back இன்சிடென்ட்!

Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்து வரும் மிகசிறந்த நடிகர். இளசுகளுக்கு போட்டியாக பாக்ஸ் ஆபீஸ் வேட்டை நடத்தி வரும் மிகசிறந்த ஆளுமை. 

lee kuan yew is the best political super star says super star rajinikanth in a interview in director balachander ans

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பலர் பேட்டி கண்டுள்ளனர், ஆனால் சூப்பர் ஸ்டார் மிகவும் பயந்துபோய் அமர்ந்திருந்து, கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ஒரு பேட்டி என்றால், அது D40 என்ற நிகழ்வில் நடந்த ஒரு சுவாரசியமான பேட்டி தான். D40, அதாவது கடந்த 2010ம் ஆண்டு இயக்குனர்கள் சங்கத்தின் 40ம் ஆண்டு விழாவில் நடந்த ஒரு சுவாரசியமா பேட்டி அது. 

90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பிடித்தமான இரு நிகழ்வுகளில் ஒன்று அது என்றே கூறலாம் (மற்றொன்று கமல்50 என்ற விழா). அந்த டைரக்டர் 40 என்ற விழாவில் பலர் பங்கேற்று பேசினார், தங்களை நடிகர்களாக, நடிகைகளாக மெருகேற்றி அழகு பார்த்த இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது நடந்த அந்த விழாவில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்கள் தனது சிஷ்யனான ரஜினிகாந்தை பேட்டி கண்டார்.

நச்சுனு 4 ஃபாரீன் பட கதையை திருடுறேன்.. படம் பண்றேன்.. ஆள விடுங்க சாமி - குசும்புக்கார பிரதீப் போட்ட ட்வீட்!

சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் அந்த பேட்டி சென்றது, தனது டைரியில் குறித்து வைத்திருந்த பல கேள்விகளை ரஜினிகாந்திடம் கேட்க, அவரும் கட்டிய கையை எடுக்கலாம், குருவிற்கான மரியாதையை அளித்து தனது பதில்களை கூறினார். அப்போது இயக்குனர் பாலசந்தர் அவர்கள், உனக்கு பிடித்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டார். அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் கூறினார். 

Lee Kuan Yew

அப்போது சற்றும் யோசிக்காமல் சூப்பர் ஸ்டார் சொன்ன பதில் லீ குவான் யூ, சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர் அவர். இப்பொது சிங்கப்பூரின் பிரதமராக உள்ள லீ அவர்களின் தந்தையும் அவர் தான். சென்னையை விட சிறிய தீவை இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்த்தில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் அவர், தனது வாழ்நாள் முழுவதையும் சிங்கப்பூரை மேன்படுத்தவே செலவிட்டார். 

பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

கடந்த 2015ம் ஆண்டு தனது 92வது வயதில் அவர் இறந்தபோது கூட, தனது ஆழ்ந்த சோகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. லீ குவானின் ஆட்சியில் தான் சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் பல நல்ல உயர்வுகளை பெற்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவோடு இன்று மாபெரும் நல்லுறவோடு சிங்கபிரே திகழ அவரும் ஒரு முக்கிய காரணம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios