திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு... பேரனுக்கு சொப்பு சாமான் வாங்கி சென்ற லதா ரஜினிகாந்த்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அங்கு சாமி தரிசனம் செய்தார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்குள்ள கடைகளில் ஐந்து கிலோ எடையுள்ள அரங்கநாத பெருமாள் சுவாமி வெங்கல சிலையை கேபிள் கார்த்தி, இரும்பு கடை ஸ்ரீதர் ஆகியோர் லதா ரஜினிகாந்த் இடம் வழங்கினார். தொடர்ந்து லதா ரஜினிகாந்த் நாம கட்டி, ஸ்ரீ சூரணம் சாலிகிராமம் மரப்பெட்டி, மர சொப்பு சாமான், பந்து ஆகியவற்றை தன் பேரக்குழந்தைகளுக்காக வாங்கிச் சென்றார்.
இதையும் படியுங்கள்... பழசை மறக்காத ரஜினி! பஸ் கண்டக்டராக வேலைபார்த்த இடத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ
லதா ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களையும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு சென்றார் லதா ரஜினிகாந்த். அப்போது ரஜினி ரசிகர்களும் உடன் இருந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருப்பதால் அவர் லதா ரஜினிகாந்த் உடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரவில்லை. பெங்களூருவில் தான் பஸ் கண்டக்டராக பணியாற்றிய ஜெயாநகர் பஸ் டிப்போவுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களையும் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ரஜினியால் சீமானுக்கும் லாரன்ஸுக்கு இடையே வெடித்த சண்டை... ஒருவழியாக முடிவுக்கு வந்தது