ரஜினியால் சீமானுக்கும் லாரன்ஸுக்கு இடையே வெடித்த சண்டை... ஒருவழியாக முடிவுக்கு வந்தது

நடிகர் ரஜினிகாந்த் குறித்து நல்ல விதமாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

Rift between Raghava Lawrence and Seeman ends because of Rajinikanth gan

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் சீமானை கடுமையாக சாடினார். இது நாளடைவில் சீமானுக்கும் ராகவா லாரன்ஸுக்குமான சண்டையாக மாறியது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், ரஜினி உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் காலில் விழுந்த விவகாரம் குறித்து கேட்டதற்கு, ரஜினி தனக்கு விருப்பப்பட்டதை செய்கிறார் அதை பெரிதுப்படுத்த வேண்டாம் என சொன்னதோடு, ரஜினி தமிழ்நாட்டின் பெருமை என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் சீமானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

அவருடைய பதிவில், ரஜினி குறித்து சீமானின் பேட்டியை பார்த்ததாகவும், அதற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். சீமான் ரஜினியை விமர்சித்த போது தானும் சீமானை விமர்சித்த்தை சுட்டிக்காட்டியுள்ள ராகவா லாரன்ஸ், விரைவில் சீமானை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீமான் ராகவா லாரன்ஸ் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Exclusive : ரஜினிகாந்தின் வட இந்திய பயணம்! - ஆன்மிகமா? அரசியலா?- உண்மையை உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios