Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்தியின் புதுப்பட கதை இதுதான்!: சஸ்பென்ஸை உடைத்த டைட்டில்

பொன் காலத்தில் வாழ்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான். ’நம்ம வீட்டு பிள்ளை’ பெரிதாய் வெற்றி பெறாவிட்டாலும் ஓ.கே. ரகமானது. ஹீரோ செமத்தியாய் ஊற்றிக் கொண்டது. இந்த நிலையில் கிடப்பில் கிடந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் பிக் அப் ஆகிறது. அதற்கு ‘அயலான்’ என பெயர் வைத்துள்ளனர். பெயரை பார்த்தும், கதையை பார்த்தும் ‘இது வேற்று கிரக மனிதனை பற்றிய படம். அமீர்கானின் PK போல’ என்கிறார்கள். 

latest story of Sivakarthikeyan move
Author
Tamil Nadu, First Published Feb 4, 2020, 6:16 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

* தமிழ் சினிமாவின் ஜூனியர் மோஸ்ட் இயக்குநர்தான் கார்த்திக் நரேன். மூன்று படங்கள் எடுத்திருக்கிறார். முதல் படமான துருவங்கள் 16! செம்ம ஹிட், ரெண்டாவது படமான ‘நரகாசுரன்’ வெளியாகவில்லை, மூன்றாவது படமான மாஃபியா இதோ ரிலீஸாகிறது. இந்நிலையில் நான்காவது படமாக தனுஷுடன் கைகோர்க்கிறார். 

* சேரன் மிகச் சிறந்த படைப்பாளி. அதேபோல் மிக சென்சிடீவ் நபரும் கூட. சமீபத்தில் ஒரு இணையதளம் இவருக்கு விருது வழங்கியது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது ‘ராஜாவுக்கு செக்’ படத்தினை பற்றி அந்த இணையதளம் விமர்சனம் வைக்கவில்லை. மாறாக ‘விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை’ என்று கூறி டீலில் விட்டுவிட்டது. டென்ஷனான சேரன், ‘மரியாதை, கவுரவம் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்’ என்று கொதித்து, தனக்கு வழங்கப்பட்ட  மெடலை திருப்பியனுப்பியுள்ளார். 

* தமிழ்சினிமாவில் ஒருகாலத்தில் கவர்ச்சியில் கலக்கித் தள்ளியவர் நமீதா. படிப்படியாய் வாய்ப்புகள் குறைந்து, உடல் எடை அதிகரித்து, திருமணமாகி செட்டிலானார். பின் உடல் எடையை அதிகம் குறைத்து, மீண்டும் ஸ்லிம்மாகி இதோ பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார். அரசியலோ, ஒன்றிரண்டு சினிமாக்களிலும் நடிப்பவர், வெப்சீரீஸிலும் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். 


* கெளதம் வாசுதேவ் மேனனனுக்கும், சூர்யாவுக்கும் செம்ம கெமிஸ்ட்ரி உண்டு. இதற்கு காரணம் ஜோதிகா. அவரது சிபாரிசால்தான் சூர்யாவுக்கு காக்க காக்க படம் கிடைத்தது. முதலில் அதில் நடிக்க இருந்தவர் விக்ரம். ஆனால் சில பிரச்னைகளால் அவர் க்ளிக் ஆகவில்லை. சூர்யா உள்ளே வந்தார். அப்படத்துக்கு பின் அவரது ரேஞ்ச் மாறியது. அதன் பின் கெளதமும், அவரும் இணைந்து வாரணம் ஆயிரம் பண்ணினர். படம் கலவையான விமர்சனம் பெற்றது. ஆனால் பாடல்கள் தாறுமாறு ஹிட். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்துள்ளார் வெளிப்படையாக. 

* பொன் காலத்தில் வாழ்ந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இது போதாத காலம்தான். ’நம்ம வீட்டு பிள்ளை’ பெரிதாய் வெற்றி பெறாவிட்டாலும் ஓ.கே. ரகமானது. ஹீரோ செமத்தியாய் ஊற்றிக் கொண்டது. இந்த நிலையில் கிடப்பில் கிடந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் பிக் அப் ஆகிறது. அதற்கு ‘அயலான்’ என பெயர் வைத்துள்ளனர். பெயரை பார்த்தும், கதையை பார்த்தும் ‘இது வேற்று கிரக மனிதனை பற்றிய படம். அமீர்கானின் PK போல’ என்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios