a successful Indian movie got failed in china
தென்னிந்திய திரையுலகையே ஒரு கலக்கு கலக்கிய பிரம்மாண்ட வெற்றித்திரைப்படமான பாகுபலி, தோல்வியைத் தழுவியதாக ஒரு அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. பாகுபலி-1,பாகுபலி-2 என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இந்த திரைப்படம் ஒரு இடத்தில் மட்டும் எதிர்பாராத அளவு தோல்வியை தழுவியதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. பாகுபலி திரைப்படத்தில் முதல் பாகம் சீனாவில் வெளியான போது 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
இதனால் பாகுபலி-2 500 கோடி வரை சீனாவில் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. ஆனால் பாகுபலி-2 வசூல் செய்தது என்னவோ 70 கோடி தானாம். இதனால் பாகுபலி-2 அங்கு மட்டும் தோல்வியை தழுவியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன
