வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம், கொரோனாவை விட அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஊரடங்கில் அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கியதால், கிசு கிசு இல்லை என கவலைப்பட்டவர்கள் வெறும் வாய்க்கு அவுல் கிடைத்த மாதிரி அமைந்துள்ளது இந்த செய்தி. இன்னும் தொலைக்காட்சியில் இந்த விஷயத்தை வைத்து விவாதம் நடத்தாது தான் குறை, மத்தபடி செம்ம ஹாட் டாப்பிக் இது தான்.

இது குறித்து சோசியல் மீடியாவில் சில வனிதாவுக்கு, ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் வார்த்தைகள் தெளிவாக உள்ளதால் அவர் மீது எந்த தவறும் இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே வனிதாவால் ஆன்லைன் பேட்டியில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த விஷயத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர் #ISupportElizabeth என்கிற ஹேஷ்டேகை ட்விட்டரில் உருவாக்கியுள்ளார். 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

முறையாக விவாகரத்து வாங்காத திருமணத்தை ஆதரிக்க முடியாது என்றும், எலிசபெத் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு உங்களுடைய ஆதரவை காட்டுங்கள் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார். லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டை பார்த்த பலரும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூடவே பீட்டர் பாலையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். முதல் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டு வனிதாவுடன் இருக்கும் பீட்டர் பாலுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.