நடிகை, இயக்குனர், தொகுப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் மீண்டும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பதில் கொடுக்கும் விதத்தில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்த நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை.  இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, தொகுத்து வழங்கினார். இவர் வெளியேறிய பிறகு,  நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுப்பாளராக மாறினார்.

இந்த நிகழ்ச்சி குடும்பத்தில் நடக்கும் கணவன்-மனைவி பிரச்சனை,  காதல் பிரச்சனை, சமூக பிரச்சனை போன்றவற்றிற்கு தீர்வு கொடுக்கும் களமாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் ஆதரவு கொடுத்த போதிலும், பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது ஒரு சித்தரிக்க பட்ட நிகழ்ச்சி என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.  

பின்னர் லட்சுமி ராமகிருஷ்னன் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தினார்.  இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போன்று மற்றொரு நிகழ்ச்சியை புதிய தொலைக்காட்சி ஒன்றில் இவர்  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது...  "அந்த நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதில் சிறப்பாக பணியாற்றினேன்.  பல சேனல்களில் இருந்து தன்னை மீண்டும் இதே போன்ற நிகழ்ச்சிக்கு அணுகினார்கள். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவில்லை என கூறி, பரவிய வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.