மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் யோகி பாபு (yogi babu).

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது தன்னுடைய டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருபவர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்த வடிவேலு மற்றும் சந்தானம் இருவருமே ஹீரோவாக நடிக்கத் துவங்கிய பின்பு, சிறந்த காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்க பலர் போட்டி போட்ட நிலையில் இந்த இடத்தை நிரம்பியவர் காமெடி நடிகர் யோகி பாபு தான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் ரஜினி, அஜித், விஜய், என முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். 

அதே நேரத்தில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் எந்தவிதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி நடித்து அசத்துகிறார் யோகி பாபு (yogi babu). கடைசியாக இவர் கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், தற்போது புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் யோகி பாபு. காதல் காமெடி கலந்து உருவாகும் இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் (lakshmi menon) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்கி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான லட்சுமி மேனன் (lakshmi menon), இதையடுத்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதையடுத்து இந்தாண்டு வெளியான புலிக்குத்தி பாண்டி படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்த அவர் தற்போது மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்.