Asianet News TamilAsianet News Tamil

Nayanthara : முருகனை தரிசிக்க வந்த மூக்குத்தி அம்மன்... திருச்செந்தூருக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் உடன் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

Lady superstar Nayanthara Tiruchendur Temple visit with her husband Vignesh Shivan gan
Author
First Published May 14, 2024, 3:18 PM IST

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட பின்னர், இருவருமே சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப்பறக்கின்றனர். நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் ஆகிய திரைப்படங்கள் உள்ளன. அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது எல்.ஐ.சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதுதவிர இவர்கள் இருவரும் இணைந்து லிப் பாம், 9ஸ்கின், பெமி9 போன்ற நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி டிவைன் புட்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளனர். இப்படி சினிமா, பிசினஸ் இரண்டிலும் செம்ம பிசியாக உள்ள விக்கி நயன் ஜோடி தற்போது ஆன்மீக சுற்றுலா சென்றிருக்கின்றனர். முதலில் கன்னியாக்குமரி சென்ற அவர்கள் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படியுங்கள்... Theatre and OTT release: தியேட்டரில் 3; ஓடிடியில் 2! மே 17ந் தேதி ரிலீஸாக உள்ள தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

Lady superstar Nayanthara Tiruchendur Temple visit with her husband Vignesh Shivan gan

இதையடுத்து சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். பின்னர் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் விக்கி நயன் ஜோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி திருச்செந்தூர் வந்த அவர்கள், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களை காண ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

பின்னர் அங்கிருந்த போலீசார் விக்னேஷ் சிவனையும், நயன்தாராவையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த ஆன்மீக பயணத்தின் போது ஏராளமான ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர் விக்கி நயன் ஜோடி. கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தபோது தென்மாவட்டங்களுக்கு வருகை தந்திருந்த நயன்தாரா இதுபோன்று ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Nayanthara Temple Visit : காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios