ஆன்லைனில் நயன்தாரா படமா?... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...!

அம்மன் படம் என்பதால் ஆடி மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

Lady super Star Nayanthara Mookuthi amman Movie Not Released in OTT

ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் “மூக்குத்தி அம்மன்”. இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்திற்காக விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Lady super Star Nayanthara Mookuthi amman Movie Not Released in OTT

இதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!


கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 
தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் “மூக்குத்தி அம்மன்” படத்திற்கான பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். முதலில் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இரண்டு போஸ்டர்களை ரிலீஸ் செய்திருந்தனர். 

Lady super Star Nayanthara Mookuthi amman Movie Not Released in OTT

இதையும் படிங்க: “கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

முழுக்க முழுக்க அம்மனாகவே காட்சி தந்த நயன்தாராவின் செகண்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. சிலர் நயன்தாரா அம்மன் கெட்டப்பிற்கு பொருத்தமாகவே இல்லை என்றும், அம்மன் ஏன் பயந்த மாதிரி இருக்கு என்று கலாய்த்திருந்தனர். அம்மன் படம் என்பதால் ஆடி மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

Lady super Star Nayanthara Mookuthi amman Movie Not Released in OTT

இந்நிலையில் கொரோனா பிரச்சனை உச்சத்தில் இருப்பதால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பல முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் கூட ஓடிடி எனப்படும் ஆன்லைன் பிளாட்பார்மில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை மறுநாள் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளது. முதன் முதலில் இந்த படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான போது வந்த எதிர்ப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனைத் தொடர்ந்து பல படங்களை ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Lady super Star Nayanthara Mookuthi amman Movie Not Released in OTT

இதையும் படிங்க:  சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல?

அப்படித்தான் நயன்தாரா நடிப்பில் தயாராக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தையும் ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை அந்த படத்தின் இயக்குநரும், பிரபல நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தை எக்காரணம் கொண்டு ஆன்லைனில் வெளியிட மாட்டோம் என்றும், ஊரடங்கு தளர்விற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே மூக்குத்தி அம்மன் ரிலீஸ் செய்யப்படும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios