நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!

ஆனால் நயனோ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.  

Why Nayanthara Is a Number on Actress Rj balaji Reveals the truth

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பட்டப்பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களது மனதை வென்றுவிட்டார். ஆரம்பத்தில் ஹீரோவுடன் ரொமான்ஸ், கிளாமர் டிரஸில் 4 பாட்டுக்கு டான்ஸ் என தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயினாக வலம் வந்த நயன்தாரா, அடுத்தடுத்த காதல் தோல்விகள் மற்றும் துரோகங்களை சந்தித்த பிறகு தனக்கென தனிப்பாதை அமைக்க ஆரம்பித்தார். 

Why Nayanthara Is a Number on Actress Rj balaji Reveals the truth

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். இடையில் விஜய்யுடன் நடித்த பிகில், சூப்பர் ஸ்டாருடன் நடித்த தர்பார் ஆகிய படங்கள் காலை வாரியதால் தற்போது காதலரை நம்பியுள்ளார். காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் வேற லெவலுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள காத்துவாக்குல இரண்டு காதல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

Why Nayanthara Is a Number on Actress Rj balaji Reveals the truth

தற்போது முதன் முறையாக மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த நயன்தாரா, அதற்காக விரதம் எல்லாம் இருந்தார். காதலர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து நயன்தாரா கோவில், கோவிலாக வழிபாடு நடத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. மூக்குத்தி அம்மன் படத்தில் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 

Why Nayanthara Is a Number on Actress Rj balaji Reveals the truth

இதையும் படிங்க: கேப்டன் மகன்னா சும்மாவா?... 30 கிலோ வரை எடையை அசால்ட்டாக குறைத்து ஸ்மார்ட் லுக்கிற்கு மாறிய புகைப்படம்...!

இந்நிலையில் நயன்தாராவைப் பற்றிய சூப்பர் ரகசியம் ஒன்றை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தில் மட்டுமல்லாது நயனுடன் படங்களில் நடித்தவர் என்ற முறையில் அவர் கூறியுள்ள சூப்பர் தகவல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தற்போதைய தமிழ் சினிமா சூழலில் நடிகைகள் பலரும் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் நயனோ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார்.  

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி நான் வேலை பார்த்த நடிகைகளிலேயே நயன்தாரா தான் மிகவும் டிசிப்லினானவர். அதனால் தான் இந்த ஆணாதிக்கம் மிக்க திரைத்துறையில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios