50 ஆண்டுகளாக 5 மொழியில் திரைத்துறையை கலக்கியவர் ஸ்ரீதேவி. 1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனாம்பட்டி கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, தனது 4 வயதில் கந்த கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தில் 13 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தார். இருவருடனும் இவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. தெற்கில் பிறந்து வடக்கில் கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் மரணமடைந்தார். 

இதையும் படிங்க: “இ-பாஸ் இல்லை”... தமிழகத்திற்குள் நுழைய முயன்ற 4 பேரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்..!

பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனிகபூரை இரண்டாம் தாரமாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். போனிகபூருக்கு மோனா என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்று அர்ஜுன் என்ற மகனும், அன்சுலா என்ற மகளும் இருந்தனர். ஸ்ரீதேவியை திரையில் கண்டதும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பின் நாட்களில் போனிகபூரே கூறியுள்ளார். அதன் பின்னர் முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கூடாது என போனிகபூருக்கு ஸ்ரீதேவி கட்டளையிட்டதாக தகவல்கள் உண்டு. எங்கே போனிகபூர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ? என்ற பயம் ஸ்ரீதேவியிடம் இருந்ததாக நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

இதையும் படிங்க: ஜோதிகாவைத் தொடர்ந்து த்ரிஷா... முன்னணி நடிகைகளுக்கு விடாமல் கொக்கி போடும் ஓடிடி...!

அதைவிட ஸ்ரீதேவி கண்டு அஞ்சிய மற்றொரு விஷயம், போனிகபூரின் மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரை நினைத்து தான் ஸ்ரீதேவி தனது வாழ்நாள் முழுவதும் அஞ்சியுள்ளார். தனது தாயிடம் இருந்து தந்தையை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அர்ஜுன் கபூருக்கு எப்போதுமே ஸ்ரீதேவி மீது கோபம் உண்டு. அதனால் தனது வாழ்க்கைக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ? என ஸ்ரீதேவி மரணமடையும் வரை ஒருவித அச்சத்துடனே காலம் கடத்தியுள்ளார். 

இதையும் படிங்க:  “கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

ஆனால் அப்படி ஸ்ரீதேவி நினைத்தது போல் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆம்.. ஸ்ரீதேவி மரண செய்தி கேட்டு முதல் ஆளாக ஓடி வந்தது அர்ஜுன் கபூர் தான். மனைவியையும், அம்மாவையும் பரிகொடுத்த சோகத்தில் இருந்த போனிகபூர் மற்றும் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு ஆறுதலாக நின்றார். அண்ணன் அர்ஜுன் கபூருடன் தனது மகள்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீதேவிக்கு இருந்தது. அவரது வாழ்நாளில் நிறைவேறாத அந்த ஆசை மரணத்திற்கு பிறகு நிறைவேறியது. தற்போது அர்ஜுன் கபூர் வீட்டிற்கு ஜான்வி கபூர் அடிக்கடி சென்று வருவதை காண முடிகிறது. அண்ணன் அர்ஜுன் கபூருடன், ஜான்வி எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.