Nayanthara : டேய் இருடா.. அதட்டிய நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்கி.. Fun மோடில் இளம் ஜோடி - Viral Video!

Nayanthara & Vignesh Shivan : பிரபல நடிகை நயன்தாரா தனது கணவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் மாற்றும் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கழித்து வருகின்றார்.

Lady Super Star Nayanthara and vignesh shivan celebrated their second year wedding anniversary ans

தமிழ் திரையுலகில் "ஐயா" திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய நயன்தாராவிற்கு தொடக்கத்திலேயே கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் "சந்திரமுகி" என்கின்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு என்பது அனைவரும் அறிந்ததே.  

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலஹாசன் அவர்களை தவிர தளபதி விஜய், தல அஜித், விக்ரம், சிம்பும் தனுஷ், சிவகார்த்திகேயன் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நயன்தாரா தற்பொழுது கோலிவுட் உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வளம் வந்து கொண்டிருக்கிறார். 

Modi : ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை.. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா - அரங்கை நிறைத்த சினி பிரபலங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. தற்போது இந்த ஜோடிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாய் மூலம் நயன்தாரா இந்த இரண்டு குழந்தைகளையும் பெற்றடுத்தார், அந்த விஷயம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த கோடை விடுமுறையை தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களோடு வெளிநாட்டில் கொண்டாடி வரும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனோடு இணைந்து பொழுதை கழிக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் அதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். 

இப்பொது பாலிவுட் பக்கம் சென்றுள்ள நயன்தாரா, மீண்டும் பல தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். மேலும் தனது கணவருடன் இணைந்து Femi9 என்ற நிறுவனத்தையும் அவர் இப்பொது நடத்தி வருகின்றார். 

Tamannaah : ஓ இது தான் வீக் எண்ட் வைபா? Treadmillல் சேட்டை செய்யும் தமன்னா - இணையத்தில் வைரலாகும் காணொளி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios