நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக, 'குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

அந்த வகையில் நடிகர் சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷுடன் 'பொல்லாதவன்' அர்ஜுனுடன் 'கிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிப்பையும் தாண்டி அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். மேலும் சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் 'அம்ரீஷ்' உதவியுடன் அரசியலில் நுழைந்தார். கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கியுள்ள இவர், தற்போது  நடித்துவரும் படம் ஒன்றில், நாயகன் ரம்யா கன்னத்தில் அரைவது போன்ற ஒரு காட்சி உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

இதை கேட்டவுடன் முடியவே முடியாது உடனடியாக காட்சியை மாற்றங்கள்,  என்னால் யாரிடமும் அரை வாங்கும் காட்சியில் நடிக்க முடியாது என கறாராகப் பேசி விட்டாராம்.  இதைக் கேட்டு இயக்குனர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டாராம். காரணம் அந்த காட்சி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சி என்பதால் தான்.