தங்கத் தாமரை மகளே.. சிக்கென்ற கோல்டன் கலர் ஆடையில் சமந்தா - ஹார்டின் போட்டு அன்பை அள்ளிதெறிக்கும் ரசிகர்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் சமந்தா தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அவருடைய ரசிகர்களால் பெரிய அளவில் விரும்பப்பட்டு வருகிறது. அப்புகைப்படத்தை கண்டு கமெண்டில் ஹார்டின்களை சிதறவிட்டு வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
சிங்கார சென்னையில் பிறந்து, ஸ்டெல்லா மேரிஸில் தனது கல்லூரி படிப்பை முடித்து தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வரும் ஒருவர்தான் சமந்தா. கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமான சமந்தா.
இவர் அதர்வா நடிப்பில் அதே ஆண்டு வெளியான பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை சமந்தா அவர்கள், தெலுங்கு திரை உலகில்லும் பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.
Ravindran duraisamy interview | விஜய்க்கு போட்டி சிவகார்த்திகேயன் தான்! - ரவீந்திரன் துரைசாமி!
இந்த சூழ்நிலையில் தான் அவரோடு முதல் திரைப்படத்தில் இணைந்து நடித்த தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யா என்பவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த 2023ம் ஆண்டில் இவருடைய நடிப்பில் குஷி மற்றும் சென்னை ஸ்டோரி ஆகிய இரு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இவை இல்லாமல் இன்னும் சில படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக வெளியான அவருடைய இரண்டு திரைப்படங்களான யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய இந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், அடுத்தபடியாக விஜய் தேவர்கொண்டாவுடன் அவர் நடித்து வரும் குஷி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான வைஷ்ணவி பிரவீன் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தங்க நிற ஆடையை அணிந்து கொண்டு சமந்தா அழகாக போஸ் கொடுக்கும் அந்த போட்டோவிற்கு சமந்தாவின் ரசிகர்கள் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர். மேலும் கமெண்டுகளில் ஹார்டின் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்