Asianet News TamilAsianet News Tamil

இந்த விஷயம் விக்ரமுக்கு தெரியுமா?.. நாயகனுக்கே தெரியாமல் வெளியான கர்ணா பட டீசர் - இயக்குனர் பார்த்த பலே வேலை!

பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஆர் எஸ் விமல் என்பவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் கர்ணா. இதிகாசத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகவும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

Kollywood Actor vikram karna movie teaser out now director says the movie rolls soon ans
Author
First Published Sep 24, 2023, 11:00 PM IST | Last Updated Sep 24, 2023, 11:00 PM IST

நடிகர் விக்ரம் தமிழ் திரை உலகில் டப்பிங் கலைஞராக களமிறங்கி, அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, பாலாவின் சேது என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஒரு நடிகர். தமிழ் திரையுலகில் கமலஹாசனுக்கு அடுத்தபடியாக, தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக பெரிய அளவில் தன்னை உருமாற்றிகொள்ளலும் நடிகர் தான் விக்ரம். 

இவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், அண்மையில் மணிரத்னம் நேரத்தில் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார் விக்ரம். 

மாரிமுத்து இல்லை.. ஆனாலும் மாஸ் காட்டும் எதிர்நீச்சல்.. இந்த வார TRP - டாப்பில் உள்ள சீரியல்கள் என்னென்ன?

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்படவிருந்த கர்ணா என்ற திரைப்படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்எஸ் விமல் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தில் வரும் போர் காட்சி அமைப்பு ஒன்றும் அப்போதே படமாக்கப்பட்டது. 

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த திரைப்படம் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த சூழலில் தற்பொழுது இப்படத்தின் இயக்குனர் ஆர் எஸ் விமல் அவர்கள் இந்த படத்தின் டீசர் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார். 

விரைவில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து நடிகர் விக்ரம் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. கதாநாயகனின் அனுமதி இல்லாமலேயே இந்த திரைப்படம் தற்பொழுது டீசர் வரை சென்றுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விரைவில் துருவ நட்சத்திரம் என்கின்ற திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரித்விக் முதல் நெல்சன் வரை.. களைகட்டிய ஜெயிலர் பட சக்சஸ் மீட் - சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் கிளிக்ஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios