கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். சமீபத்தில் அவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான "கே.ஜி.எஃப்." திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. 

தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் "கே.ஜி.எஃப்" படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் செம்ம மிரட்டலான லுக்கில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இன்று ராக் ஸ்டார் யஷ் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத அளவில் 5700 கிலோ எடையுள்ள கேக்கை உருவாக்கி ரசிகர்கள் யஷ் பிறந்தநாளை வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர். 

ரசிகர்களின் அன்புக்கு மதிப்பு கொடுத்து, ராக்கி பாய் யஷ் அந்த பிரம்மாண்ட கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இதனிடையே ராக்கி பாய் மீதான அன்பால் அவரது ரசிகர்கள் செய்த பிரம்மாண்ட கேக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதற்கான போட்டோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள யஷ் ரசிகர்கள், அதையும் சேர்த்து தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.