Asianet News TamilAsianet News Tamil

Mohan Juneja : கே.ஜி.எஃப் பட நடிகர் உடல்நலக்குறைவால் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

Mohan Juneja : மோகன் ஜூனேஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

KGF movie actor Mohan Juneja passed away
Author
Tamil Nadu, First Published May 7, 2022, 9:43 AM IST

கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அண்மையில்; யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் 2-ம் பாகத்திலும் சிறிய வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் மோகன் ஜூனேஜா.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வடாரா என்கிற சீரியல் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் ஜூனேஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

KGF movie actor Mohan Juneja passed away

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்...Nayanthara Marriage : திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா... காதலனை கரம்பிடிக்கப்போவது இந்த தேதியில் தானாம்

Follow Us:
Download App:
  • android
  • ios