- Home
- Cinema
- Nayanthara Marriage : திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா... காதலனை கரம்பிடிக்கப்போவது இந்த தேதியில் தானாம்
Nayanthara Marriage : திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா... காதலனை கரம்பிடிக்கப்போவது இந்த தேதியில் தானாம்
Nayanthara Marriage : சிம்பு, பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. இவர்களது காதல் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா, கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சந்திரமுகி, கஜினி, சிவகாசி என குறுகிய காலத்திலேயே ரஜினி, சூர்யா, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்துள்ளார். குறிப்பாக 2 முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார் நயன்.
சிம்பு, பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா. இவர்களது காதல் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கடந்தாண்டு உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாம். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ரூ.10 கோடி செலவில் தடபுடலாக நடக்க இருந்த ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு திடீரென நிறுத்தப்பட்டதன் பகீர் பின்னணி