- Home
- Cinema
- ரூ.10 கோடி செலவில் தடபுடலாக நடக்க இருந்த ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு திடீரென நிறுத்தப்பட்டதன் பகீர் பின்னணி
ரூ.10 கோடி செலவில் தடபுடலாக நடக்க இருந்த ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு திடீரென நிறுத்தப்பட்டதன் பகீர் பின்னணி
Shankar : மகளின் திருமண வரவேற்பை மே 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட இயக்குனர் ஷங்கர், அதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கு கொடுத்து வந்தார்.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரபல தொழிலதிபரின் மகனும், கிரிக்கெட் வீரருமான ரோகித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து மகளின் திருமண வரவேற்பை மே 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட இயக்குனர் ஷங்கர், அதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கு கொடுத்து வந்தார். இந்த விழா நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக திடீரென மகளின் திருமண வரவேற்பு நிறுத்தப்படுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஷங்கர்.
ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கரின் மருமகனான ரோகித் ஒரு புகாரி சிக்கி உள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது தீவிரமடைந்து உள்ளதால், அவர் எந்த நேரத்திலும் போலீசிடம் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதனால் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கும், ரோகித்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இந்த சமயத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினால் சரியாக இருக்காது என கருதிய ஷங்கர், பத்திரிக்கை கொடுத்த அனைவருக்கும் மெசேஜ் வாயிலாக விஷயத்தை விளக்கிக் கூறினாராம். மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்காததால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... Manobala : சிவகார்த்திகேயனின் செயலால் கடுப்பான மனோபாலா... என்ன பொசுக்குனு இப்படி கேட்டுட்டாரு?