Manobala : சிவகார்த்திகேயனின் செயலால் கடுப்பான மனோபாலா... என்ன பொசுக்குனு இப்படி கேட்டுட்டாரு?
Manobala : டான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை நேற்று வெளியிட்ட சிவகார்த்திகேயன் அதற்காக சிறப்பு போஸ்டர் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டான். இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்லூரி கதைக்களத்துடன் நகைச்சுவை நிறைந்த படமாக தயாராகி உள்ள இப்படம் வருகிற மே 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
டான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் டான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை நேற்று வெளியிட்ட சிவகார்த்திகேயன் அதற்காக சிறப்பு போஸ்டர் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். இதில் தன்னுடைய பெயர் இல்லாததை கவனித்த நடிகர் மனோபாலா, ;எங்கப்பா என் பேரு...?’ என சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், சீனியர் நடிகரை இப்படி புறக்கணிக்கலாமா என சிவகார்த்திகேயனுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Naane Varuven : ‘நானே வருவேன்’ படத்துக்காக தனுஷை நம்பி செல்வராகவன் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்