- Home
- Cinema
- Naane Varuven : ‘நானே வருவேன்’ படத்துக்காக தனுஷை நம்பி செல்வராகவன் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்
Naane Varuven : ‘நானே வருவேன்’ படத்துக்காக தனுஷை நம்பி செல்வராகவன் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்
Naane Varuven : சாணிக்காயிதம் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செல்வராகவன், தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள நானே வருவேன் படம் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள செல்வராகவன், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள படம் நானே வருவேன். ஏற்கனவே தனுஷுடன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய செல்வராகவன் தற்போது 5-வது முறையாக இணைந்துள்ளார்.
தனுத் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் சுவிஸ் நாட்டை சேர்ந்த எல்லி ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் நானே வருவேன் படம் குறித்து சில முக்கிய தகவல்களை வெளியிட்டிருந்தார் செல்வராகவன்.
அதில் ஒன்று தான் இப்படத்தின் கதை. உண்மையில் நானே வருவேன் படத்தின் கதை தன்னுடையது அல்ல என்று கூறி அதிர்ச்சி கொடுத்த செல்வராகவன், அது தனுஷ் எழுதியது என்ற சர்ப்ரைஸ் அப்டேட்டையும் வெளியிட்டார். இதுவரை தானே எழுதிய கதையில் படமெடுத்து வந்த தனக்கு, முதன்முறையாக வேறொருவர் எழுதிய கதையை இயக்குவது புது அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தம்பியை நம்பி செல்வராகவன் எடுத்துள்ள இந்த ரிஸ்க் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்...உள்ளாடை தெரிய உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்... நெஞ்சை நிமிர்த்தி கொடுத்த படு ஹாட் போஸ் வைரல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.