keethi suresh issue

கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ ' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிக்க துவங்கிவிட்டார்.

இந்த படங்களை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த 'தொடரி', 'பைரவா' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து படவாய்ப்புகள் மட்டும் குறையாமல் கைப்பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும், நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்காக, கீர்த்தி சுரேஷ் உண்மையாகவே பருமனாக நடித்தால் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என படக்குழுவினர் கீர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது நான் சூர்யாவிற்கு ஜோடியாகவும், விக்ரமிற்கு ஜோடியாகவும் நடித்து வரும் நிலையில், உடல் பருமனாக மாறினால் தன்னுடைய கேரியர் பாதிக்கும் என கூறி கறாராக மறுத்துவிட்டாராம்.

இதனால் இவரை குண்டாக காண்பிக்க சிஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும். இதற்காக பலகோடி செலவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.