ரெமோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பைரவா படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் பெயரிட படத்த புது படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக நடிக்க ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ் தற்போது இதில் நடிக்கமுடியாது என கூறியுள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால் ரெமோ சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கீர்த்தி சுரேஷ் கேட்ட பெரிய தொகையை கொடுக்க முடியாது என்பதால் அவருக்கு பதிலாக மஞ்சிமா மோகனை இயக்குனர் கமிட் செய்துள்ளார்.

வளர்ந்துவரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என எதிர் பார்த்தவர்களுக்கு இது ஒரு ஏமாற்றம்.

மேலும் கீர்த்தி சுரேஷ் பைரவா படத்திற்கு பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்திவிடுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.