கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் மிக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும், முடிந்தபாடு இல்லை. குறிப்பாக தமிழகத்தில், சென்னை போன்ற பகுதிகளில் ஒரு நாளைக்கு மட்டும் 500 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்போடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். 

இப்படி பாதிக்கப்பட்டவர்கள் மூலம், அவர்களுடைய குடும்பத்திற்கும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால், அவர்களுடைய குடும்பத்தினர் உட்பட அனைவரையும் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால், தமிழகத்தில் மே 17 ஆம் தேதி வரை, மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறு குறு தொழிலாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: செம்ம ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா! கிழிந்த மாடல் ஜீன்ஸ்... டையிட் டிரஸ் அணிந்து இளசுகளை இம்சிக்கும் இதமான போஸ்!
 

அந்த வகையில் திரையுலகை பொறுத்தவரை,  இப்போதைக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே துவங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? படப்பிடிப்பு தொடங்கினாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது. 

இதனால் மக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்கங்கள் திறக்கப்பட  குறைந்த பட்சம் இரண்டு மாதங்களாவது ஆகும் என தெரிகிறது. இதனால், திரையரங்கில் வெளியிட திட்டமிட்ட படங்கள் ரிலீஸ் மேலும் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்:முடிவுக்கு வருகிறது நயன் - விக்கி காதல்! விரைவில் டும் டும் டும்?
 

எனவே, ஓடிடி பிளாட் ஃபாமில் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சிலர் முடிவு செய்துவிட்டனர். அந்த வகையில் ஏற்கனவே நடிகை ஜோதிகா நடித்த படத்தை, அவருடைய கணவர் சூர்யா ஓடிடி பிளாட் ஃபாமில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, இயக்குனரும் தயாரிப்பாளருமான கார்த்தி சுப்புராஜ், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து தயாரித்துள்ள, 'பெங்குயின்’ படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்:நயன்தாரா குழந்தையில் கூட இவ்வளவு அழகா! யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படத்தை வெளியிட்டு அம்மாவுக்கு வாழ்த்து!
 

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அனில் கிரிஷ் படத்தொகுப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி படத்தை தொடர்ந்து, கதையின் நாயகியாக நடித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.