தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 'மகாநடி' படத்தின் வெற்றிக்கு பின், சற்று வித்தியாசமான கதைகளையும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். 

அந்த வகையில் தற்போது, 'பெண் குயின்', 'மிஸ் இந்தியா', 'மரைக்கார்', 'குட் லக் ஷக்தி', மற்றும் 'அண்ணாத்தை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  


இந்நிலையில் இவர் வித்தியாசமான கெட்டப்பில் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் இதுவரை யாரும் பார்த்திராத, மலையாள பாரம்பரிய பெண் போல உள்ளார். ஊதா நிற ஜாக்கெட்... சந்தன நிற பட்டு முண்டு கட்டி... தலையின் உச்சி மண்டையில் கோணல் கொண்டை போட்டு, நெற்றியில் பெரிய போட்டு, மூக்குத்தி, பொல்லாங்கு, மற்றும் அதிக நகைகளையும் அணிந்துள்ளார்.

இவரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷின் இந்த தோற்றம் அவர், தற்போது நடிகர் மோகன்லாலுடன் நடித்து வரும் 'மரைக்கார்' படத்தில் நடிக்கும் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.