இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த 'மகாநடி' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மற்றும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படம், சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெற்று தந்தது. 

இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், அந்த இடத்தை தக்க வைத்து கொள்ள, தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: ஊரடங்கு ஓய்வில் வெளிவரும் குஷ்புவின் குடும்ப பொக்கிஷங்கள்! இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு!
 

அந்த வகையில், பாலிவுட் பட வாய்ப்பை கூட உதறி தள்ளிவிட்டு, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிக்கு மகளாக வெயிட்டான ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் கூட தன்னுடைய கதாபாத்திரத்திற்கு, முக்கியத்துவம் இல்லை என்றால் நிராகரித்து விடுகிறாராம்.

நயன்தாரா பாணியில் நூல் பிடித்து முன்னேறி வரும் கீர்த்தி, தற்போது அடுத்ததாக பிரபல நடிகையும், இயக்குனரும், தயாரிப்பாளருமான விஜய நிர்மலா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: முகத்தில் மாஸ்க்.. கையில் கிளவுஸ்..! 75000 மக்களுக்கு பசியை போக்க வேலை செய்யும் சூர்யா - கார்த்தி பட நடிகை!
 

நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை அவருடைய மகன் நரேஷ் இயக்கவுள்ளதாகவும். இந்த படத்தில் தன்னுடைய அம்மா வேடத்தில் நடிக்க  கீர்த்தி சுரேஷை, அவர் அணுகி கதை கூறியதாகவும், கதையை கேட்ட கீர்த்தி நடிக்க ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

நடிகை விஜய நிர்மலா, அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.