கன்னட திரைப்படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ப்ரணீதா சுபாஷ். இதை தொடர்ந்து, நடிகர் அருள்நிதிக்கு ஜோடியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'உதயன்' என்கிற படத்தில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே, குண்டு குண்டு விழிகளாலும், கியூட் பார்வையிலும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, கதாநாயகனாக நடித்து வெளியான 'சகுனி ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த அடுத்த படத்திலேயே, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான 'மாஸ்' படத்தில் நடித்தார். தமிழில் அவ்வப்போது கவனம் செலுத்தி வந்தாலும், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தான் ப்ரணீதா அதிக கவனம் செலுத்தினார்.

மேலும் செய்திகள்: அம்மா - மகன் பண்ற காரியமா இது? உடையை மாறி மாறி போட்டு கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட கனிகா! வைரல் வீடியோ!
 

தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது இவரது பார்வை. இவரின் கைவசம் தற்போது இரண்டு, ஹிந்தி படங்கள் மற்றும் ஒரு கன்னடப்படம் மட்டுமே உள்ளது.

ஒருபக்கம் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொரு புறம் தொழிலதிபராகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில், இவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சாப்பாடு வழங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்: பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!
 

அதன்படி கிட்ட தட்ட 750000 மக்களுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார். சமையல் வேலை முதல், அனைத்தையும் பார்சல் செய்வது என அணைத்து வேலைகளையும் இவரே கூட இருந்து கவனித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை ப்ரணீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.