அம்மா - மகன் பண்ற காரியமா இது? உடையை மாறி மாறி போட்டு கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்ட கனிகா! வைரல் வீடியோ!

டப்பிங் கலைஞர், பாடகி, நடிகை, என திரைத்துறையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகை கனிகா. தற்போது இவருடைய மகனுடன், வித்தியாசமான ஆட்டம் போட்டு அனைவரையும் இவர் கவர்த்திருந்தாலும், இது கொஞ்சம் ஓவர் தான் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.
 

actress kaniha dance with son video goes viral

டப்பிங் கலைஞர், பாடகி, நடிகை, என திரைத்துறையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவர் பிரபல நடிகை கனிகா. தற்போது இவருடைய மகனுடன், வித்தியாசமான ஆட்டம் போட்டு அனைவரையும் இவர் கவர்த்திருந்தாலும், இது கொஞ்சம் ஓவர் தான் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.

நடிகர் பிரசன்னா நடித்த '5 ஸ்டார்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

actress kaniha dance with son video goes viral

தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் செய்திகள்: பரவிய வதந்தி..! எகிறி குற்றச்சாட்டுகள்..! பொறுக்க முடியாமல் மௌனம் களைத்த பாடகி கனிகா கபூர்!
 

திருமணத்திற்கு பின், குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தமிழில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' படத்தில் நடித்திருந்தார். துல்கர் சல்மான் - நித்யா மேனோன் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருந்தார்.

actress kaniha dance with son video goes viral

இதை தொடர்ந்து, சமீப காலமாக நடிகை கனிகா 37 வயதானாலும் தொடர்ந்து, குட்டை உடை அணிந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது தமிழில் 5 வருடத்திற்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', மற்றும் 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: எளிமையாக நடந்த நடிகரின் திருமணம்! திருமண பணம் மொத்தத்தையும் கொரோனா நிதிக்கு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!
 

இது ஒரு புறம் இருக்க, அவ்வப்போது... விதவிதமான புகைப்படம் வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்த கனிகா, தற்போது தன்னுடைய மகனுடன் சேர்ந்து வித்தியாசமான ஆட்டம் போட்டுள்ளார். முதலில் குட்டையான கவர்ச்சி உடையில் இவர் டான்ஸ் ஆடுவதை, அவருடைய மகன் வேஷ்டி சட்டை அணிந்து படம் பிடிப்பர். இதை அடுத்து கனிகா போட்டிருந்த உடையை அவருடைய மகன் போட்டுகொண்டு டான்ஸ் ஆட, அதனை மகன் அணிந்திருந்த வேஷ்டி சட்டையை அணிந்தபடி கனிகா படம்பிடிக்கிறார்.

actress kaniha dance with son video goes viral

இதனை இன்ஸ்டாகிராமில் கனிகா வெளியிட, அனைவராலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது... எப்போதும் போல், இவரின் இந்த வித்தியாசமான ஆட்டத்திற்கு ஒரு தரப்பினர் ஆதரவு கொடுத்தாலும், மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகிறார்கள்.


 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios