கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து, மீண்டு வந்துள்ள பிரபல பாடகி கனிகா கபூர், முதல் முறையாக கொரோனா வைரஸை தான் பரப்பியதாக, எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு   விளக்கம் கொடுத்துள்ளார்.

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

கனிகா கபூர், கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்று திரும்பிய போது இவருக்கு யாரோ ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த பாதிப்பு வெளிப்படவில்லை என்றாலும், சில நாட்கள் கழித்து இவருக்கு காச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, டெஸ்ட் செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது உறுதியானது.

மேலும் செய்திகள்: எளிமையாக நடந்த நடிகரின் திருமணம்! திருமண பணம் மொத்தத்தையும் கொரோனா நிதிக்கு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!
 

இந்நிலையில், லண்டனில் இருந்து திரும்பி வந்த கையேடு கனிகாகபூர், மத்திய அமைச்சர் உள்பட 56 பேர் கலந்து கொண்ட ஒரு பிரமாண்ட விருந்தில் கலந்து கொண்டார் என்றும், இதனால் அவர் கொரோனா பலர்க்கு பரப்பும் வாய்ப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

மேலும் கனிகா கபூர் கலந்து கொண்ட, பிரபல நட்சத்திர ஹோட்டல், அதிரடியாக மூடப்பட்டு... அங்கு பணியில் இருந்த அனைவர்க்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.

இப்படி பரவிய தகவல்களுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, பிரபல பாடகி கனிகா கபூர், விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஏழைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர் கான்... கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் காத்திருந்த நெகிழ்ச்சியான விஷயம்!
 

இதுகுறித்து அவர் கூறுகையில்...  மார்ச் 10ம் தேதியே நான் இங்கிலாந்தில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டேன்.  மார்ச் 18ம் தேதிதான் வெளிநாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் கொண்டுவர பட்ட நிலையில் எப்படி நான் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சோதனையில் இருந்து தப்பித்திருக்க முடியும். 

மேலும் மார்ச் 10ம் தேதி மும்பை வந்த தான், தனது சொந்த ஊரான லக்னோவிற்கு மார்ச் 11ம் தேதி சென்று பெற்றோர்களை சந்தித்ததாகவும், அப்போது உள்நாட்டு விமான நிலையங்களில் கொரோனா சோதனை ஏதும் நடத்தவில்லை என்றும், லக்னோவில் தன்னுடைய பெற்றோருடன் இருந்த போது, நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் தன்னுடைய உடல் நிலை மோனமானதை தொடர்ந்து 19 ஆம் தேதி மருத்துவ மனையில் தான் அனுமதிக்கப்பட்டதாகவும், 20 ஆம் தேதி எடுக்கப்பட்ட சோதனையில் தனக்கு கோரோனோ பாசிட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மூன்று முறை கொரோனா நெகடிவ் என வந்த பின்பு தான் மீண்டும் தான் வீடு திரும்பியதாக பாடகி கனிகா கபூர் கூறி இதுவரை வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

மேலும் செய்திகள்: பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!
 

தன்னுடைய முழு விளக்கத்திற்கு பின், கடைசியாக மருத்துவமனையில் தன்னை கவனமாக பார்த்துக்கொண்ட மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.