ஏழைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர் கான்... கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் காத்திருந்த நெகிழ்ச்சியான விஷயம்!
உலக நாடுகளை கடந்து, தற்போது இந்தியாவிலும் தன்னுடைய சுய ரூபத்தை காட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், மக்கள் அதிக அளவில் பாதிக்க கூடாது என்பதற்காக தற்போது, மே 3 ஆம் தேதி வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலக நாடுகளை கடந்து, தற்போது இந்தியாவிலும் தன்னுடைய சுய ரூபத்தை காட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், மக்கள் அதிக அளவில் பாதிக்க கூடாது என்பதற்காக தற்போது, மே 3 ஆம் தேதி வரை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால், கூலி வேலை செய்து அன்றாடம் தங்களுடைய பிழைப்பை நடத்தி வந்த தொழிலாளர்கள் பலர், வறுமையில் வாடும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலர் தானாக முன்வந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே, பாலிவுட் திரையுலகை சேர்ந்த... நடிகர் அமிதாப் பச்சன், திரையுலகை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு, ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை கொடுத்து உதவினார். அதை தொடர்ந்து, சல்மான் கான், உள்ளிட்ட பலர் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அமீர் கான், ஏழை மக்களுக்கு 1 பாக்கெட் கோதுமை மாவு மட்டுமே கொடுத்தார். இதனை சற்று வசதி படித்த பலர், வாங்க கூட வரவில்லை. ஆனால் உண்மையில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பலர், சாப்பிட ஏதாவது கிடைத்தால் போதும் என வாங்கி சென்றனர்.
கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் அமீர் கான் ஒரே ஒரு பாக்கெட் கோதுமை மாவு மட்டுமே கொடுத்தது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானது.
இந்த நிலையில் இந்த ஒரு கிலோ கோதுமை மாவை வாங்கி சென்ற ஏழைகளுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. கோதுமை மாவு பாக்கெட் ஒவ்வொன்றிலும் ரூபாய் 15 ,௦௦௦ வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
தான் செய்யும் உதவிகள், உண்மையாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஒரு கிலோ கோதுமை மாவு மட்டுமே என்றால்ஏழைகள் மட்டுமே வாங்குவார்கள் என்பதை அறிந்து இந்த அறிவிப்பை அமீர்கான் அறிவித்ததாகவும், இதனையடுத்து அவர் செய்யும் உதவிகள் யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் மிகச்சரியாக சென்றுள்ளதாகவும் அவரது தரப்பை சேர்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கோதுமை மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரம் பணம் இருந்தது அந்த பாக்கெட்டை வழங்கியவர்களுக்க்கு கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது