ஒருவழியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து போட்டியாளர்கள் அனைவரும் வெளியே வந்தாலும், விஜய் டிவியோ வெளியே சென்ற பிரபலங்களை அவ்வளவு எளிதில் விடுவது போல் இல்லை. 

தற்போது,  பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள ஒரு புதிய நிகழ்ச்சி ஒன்றின் ஷூட்,  இன்று நடைபெற்றுள்ளது. அதிலும் மதுமிதா, சரவணன் ஆகியோரை தவிர மற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம், பாட்டம் என மேடையையே களைகட்ட வைத்துள்ளனர்.

கவின், தல - தளபதி என இவருடைய கெட்டப்பில் டான்ஸ் ஆடிய சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதே போல்... லாஸ்லியாவுடன் செம்ம லூட்டி அடித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படங்கள் இதோ...