பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய நடிகர் கவின், ஆரம்பத்தில் அளவிற்கு அதிகமாகவே விமர்சிக்கப்பட்டலும், பின் போக... போக அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களை இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 

மேலும் இதே சீசனில் கலந்து கொண்டு விளையாடிய லாஸ்லியாவும் - கவினும் காதலிப்பது போல் நடந்து கொண்ட போதிலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததில் இருந்து இருவருமே காதல் குறித்து வாய் திறக்கவே இல்லை.

மேலும் இருவரையும் சேர்த்து வைத்து நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவருமே அப்படி வந்த வாய்ப்புகளை இருவரும் ஏற்க வில்லையாம்.

இந்நிலையில் லாஸ்லியா, ஹர்பஜன் சிங்குடன் ஒரு படம், மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படம் என பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது கவினும் திரைப்படத்தில் பிஸியாகியுள்ளார்.

அதன் படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இயக்குனர் வினீத் என்பவர் இயக்கத்தில் உருவாகும், படத்தில் கவின் நடிக்க உள்ளார் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் பெண்கள் அணி கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.