குரல் கொடுத்தால், கைகொடுக்க காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு... ஓடி வருவார் கட்டளைக்கு கரைபுரண்டே... என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன், நேற்று, தமிழக அரசை நேரடியாக விமர்சனம் செய்து, டுவிட்டரில் கருத்து கூறியிருந்தார். அதில், ஊழல் இருக்கும் வரை சுதந்திரம் பெற்றாலும் நாம் அடிமைகளே என்றும், புதிய சுதந்திர போராட்டத்துக்கு துணிச்சல் உள்ளவர்கள் வாரும் என்று கமல் கூறியிருந்தார். கமலின் இந்த டுவிட்டர் பதிவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

கமலின் டுவிட்டர் பதிவு குறித்து நடிகை கஸ்தூரி, தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கமல் கூறுவதைப் பார்த்தால், பெரிய திட்டம் ஏதும் உள்ளதோ என்றும், அவ்வாறு திட்டங்கள் இருந்தால் அவர் அதை தெளிவாக கூற வேண்டும் என்றும் அவருக்கு நேரடியாக நான் கோரிக்கை வைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

மதவாதம், சாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு பின்னால் 4 பேர் செல்கின்றனர். நம் நாட்டில் போலி சாமியாருக்குக்கூட வரவேற்பு உள்ளது. 

இந்த நிலையில், நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேர் பின்னால் 4 பேர் செல்வதில் என்ன தவறு உள்ளது என்றும் கஸ்தூரி கேட்டுள்ளார்.

கஸ்தூரி மற்றொரு டுவிட்டர் பதிவில், குரல் கொடுத்தால் கைகொடுக்க காத்திருக்கும் கண்மணிகள் கோடியுண்டு. ஓடி வருவார் கட்டளைக்கு கரைபுரண்டே என்றும் கூறியுள்ளார்.